Advertisment

பிறந்து 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிச்சென்ற தாய்–போலிஸார் மீட்டு விசாரணை!

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் ஜீன் 22ந் தேதி காலை வாக்கிங் சென்றவர்கள் காதில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஒரு முள் புதாரின் பின்புறத்தில் இருந்து குரல் வருவதை பார்த்து அங்கு சென்று பார்த்தபோது, ஒரு துணியில் சுற்றப்பட்ட ஆண் குழந்தை அழுதுகொண்டு இருந்தது. குழந்தை மீது ஈ,எறும்புகள்மொய்த்துக்கொண்டு இருந்தன.

Advertisment

Mother thrown the baby after 10 days of birth.. police investigation

இதனைப்பார்த்து அதிர்ச்சியானவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், வாலாஜா நகர காவல்நிலையத்துக்கும் தகவல் தந்தனர். உடனடியாக குழந்தை இருந்த இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ், அதிலிருந்து இறங்கிய முதலுதவி நர்ஸ் குழந்தைக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்சில் எடுத்துக்கொண்டு வாலாஜா மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தார்.

Advertisment

Mother thrown the baby after 10 days of birth.. police investigation

அங்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தியபோது, பிறந்து பத்து நாளே ஆன குழந்தை என்பது தெரியவந்தது. இந்தகுழந்தையை இங்கு கொண்டு வந்து வீசி சென்ற கல் நெஞ்ச தாய் யார் என போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

baby police throw
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe