ad

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தின் அதிமுக செயலாளராக இருந்தவர் மதியழகன். இவர் செங்கம் ஒன்றிய குழு தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் திடீரென மறைந்தார். இதனால் அவரது குடும்பம் பெரும் துயரத்தில் இருந்து வந்தது. அவரது மறைவுக்கு அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பிற கட்சியினர் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில் இன்று 11.10.18 ந்தேதி மதியழகனின் தாயார் 74 வயதான பச்சையம்மாள், தங்களது விவசாய நிலத்தில் இருந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவ்வழியாக சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கிணற்றில் பச்சையம்மாள் உடல் மிதப்பதை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சம்பவயிடத்துக்கு வந்து நடத்திய விசாரணையில் மகன் மதியழகன் இறந்ததில் இருந்து மகன் பற்றிய நினைவாகவே இருந்து வந்துள்ளார். எனக்கு முன்னாடி என் மகன் போயிட்டானே என வேதனைப்பட்டு அழுதுக்கொண்டே இருந்துள்ளார். அந்த வேதனையின் வெளிப்பாடாகவே அவர் தற்கொலை செய்துகொண்டு இருக்கலாம் என கூறினர்.

Advertisment

பச்சையம்மாள் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பச்சையம்மாள் தற்கொலைக்கு காரணம் மகன் இறந்தது தானா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா என போலீசார் நடத்தி வருகின்றனர்.