வெளிப்புறம் பூட்டப்பட்ட வீட்டில் தாய், மகன் சடலம்... போலீசார் விசாரணை!

Mother, son in a locked house... police investigation!

கிருஷ்ணகிரியில் வெளியே தாளிடப்பட்ட வீட்டுக்குள் தாயும், மகனும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக்கண்ணன். இவருடைய இரண்டாவது மனைவி கமலாவும் அவருடைய மகனும் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். வீட்டின் கதவு வெளிப்புறம் தாளிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாய் மற்றும் மகன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் செந்தாமரை கண்ணனுக்கு மூன்று மனைவிகள் இருப்பதாகவும், இரண்டாவது மனைவியான கமலாவிற்கும், மூன்றாவது மனைவியான சத்யாவிற்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று இரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சத்யா தூங்கிக் கொண்டிருந்த பொழுது ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொலை செய்து விட்டதாக அக்கம் பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்த நிலையில், செந்தாமரை கண்ணனின் மூன்றாவது மனைவி சத்யாவை கைது செய்து இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

incident Krishnagiri police
இதையும் படியுங்கள்
Subscribe