புற்றுநோய் பாதித்த விரக்தியில் குழந்தைகளுக்கு விஷம் வைத்த தாய்... கண்ணை கலங்க வைக்கும் சம்பவம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காண்பவர்கண்ணைகலங்க வைத்திருக்கிறது.

மயிலாடுதுறை அருகே வடமட்டம் பஜனை மடம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ஹாரிப். ஹாரிப் துபாயில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலோபர் பர்வீன் என்கிற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் அப்ரினா, அப்ரா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதால் தனது மாமியார் மற்றும் இரு குழந்தைகளுடன் வடமட்டத்தில் இருந்துவருகிறார் பர்வீன்.

Mother poisoning children in despair caused by cancer...

தனக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுவதை மருத்துவமனையில் பரிசோதித்த நிலோபர் பர்வீன் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதை அறிந்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தவர். நோயின் தாக்கம் அதிகமானதை கண்டு மனம் நொந்து போனார். மனம் உடைந்த பர்வீன் தனது வீட்டின் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட பர்வீன் தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விட்டு, தானும் விஷமருந்தி மயக்கமடைந்தார். கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பர்வீனின் மாமியார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது பர்வீனும், இரண்டு குழந்தைகளும் பரிதாபமான முறையில் இறந்து கிடந்ததை கண்கலங்கி பார்த்தனர்.

இதுகுறித்து பாலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஐந்து வருடங்களே ஆவதால் மயிலாடுதுறை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

cancer humanity gone. Mayiladuthurai mother
இதையும் படியுங்கள்
Subscribe