Advertisment

பச்சிளம் குழந்தை இறப்பு! சோகத்தில் தாய் தற்கொலை! 

Mother passes away after her daughter passes away

Advertisment

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி செட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி(29). இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மற்றொரு பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சேர்த்தனர். அங்கு முதல் உதவி வழங்கப்பட்டு திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அவர் நேற்றிரவு சிகிச்சை பலினின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe