Mother lost their in frustration of son not getting married

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பகம் (50). இவர் கணவர் சேகர், மகன் நவீன் (27) ஆகியோருடன் வசித்து வந்தார். சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் தனது மகனுக்கு திருமணம் ஆகாத வேதனையில் இருந்துள்ளார்.

Advertisment

இதனிடையே வீடு மாறினால் மகனுக்கு திருமணம் நடக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் அதே பகுதியில் வாடகைக்கு வேறொரு வீடு எடுத்து, அங்கு குடி புகுவதற்காக அவரே சென்று நேற்று பால் காட்சி உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு கற்பகம், திடீரென மாயமாகியுள்ளார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில், உள்ள புளியமரம் ஒன்றின் அருகே கற்பகம் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கற்பகத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மகனுக்கு திருமணம் ஆகாத விரத்தியில் தனக்குத்தானே அவர் உடலில் மண்ணெண்ணையைஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது திட்டமிட்டு யாரேனும் அவரது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றனரா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment