Advertisment

மருமகள் இறந்த துக்கம் தாளாமல் மாமியார் எடுத்த விபரீத முடிவு!

Mother-in-law's tragic decision to mourn the incident of her daughter-in-law

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ரஞ்சிதா (24). ரஞ்சிதாவுக்கும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களிலேயே, மணிவண்ணன் வேலை செய்வதற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

Advertisment

இந்த நிலையில், அரியலூரில் உள்ள வீட்டில் ரஞ்சிதா தனது மாமனார், மாமியார் மணிமேகலை (54) ஆகியோருடன் வசித்து வந்தார். ரஞ்சிதாவுக்கும், அவரது குடும்பத்திற்கும் பிரச்சனை வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ரஞ்சிதா தனது துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரின், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இதற்கிடையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மணிவண்ணன் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். இதனையடுத்து, ரஞ்சிதா இறந்த துக்கம் தாங்காமல் கடந்த 3 நாட்களாக மணிவண்ணனும், மணிமேகலையும் மனமுடைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் (31-04-24) இரவு வழக்கம்போல் மணிவண்ணன், மணிமேகலை மற்றும் மணிவண்ணனி்ன் தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மணிவண்ணன் அதிகாலை 2 மணியளவில் எழுந்து பார்த்த போது தாய் மணிமேகலை இல்லாததை அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து, மணிவண்ணன் மணிமேகலை அக்கம் பக்கத்தில் சென்று தேடி பார்த்த போது அவர் கிடைக்கவில்லை. அதன் பின்னர், மணிவண்ணன் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தார். அங்கு, வைக்கோல் போர் அருகே மணிமேகலை மயங்கிய நிலையில் கிடந்ததை அதிர்ச்சியடைந்த மணிவண்ணன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மணிமேகலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து மணிமேகலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மருமகள் ரஞ்சிதா இறந்த துக்கம் தாங்காமல் மணிமேகலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe