/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4582.jpg)
அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி சரோஜா(53). இந்தத் தம்பதிக்கு பிரியா (19) எனும் மகள் இருந்துள்ளார். பிரியாவைஅதே ஊரைச் சேர்ந்த, மாடு வைத்து பால் வியாபாரம் செய்து வரும் தமிழரசன் என்பவருக்குத்திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பிரியாவுக்கும்தமிழரசனுக்கும் மூன்று மாதங்களுக்குப் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் தமிழரசன் பிரியாவை கொலை செய்தார். இந்தக் கொலை குறித்து பிரியாவின் தாய் சரோஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழரசன் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார். பிறகு நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமிழரசன், வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் படுத்துத்தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பேண்ட் டீசர்ட் போட்ட ஒருவர், தமிழரசனை எழுப்பி ‘நீதான் தமிழரசனா’ எனக் கேட்டுள்ளார். ‘ஆமாம்’ என்று தமிழரசன் கூறியதும், அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தமிழரசனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், தமிழரசன் அலறல் சத்தம் கேட்டுஓடி வந்த அவரது தாய் விமலா தடுத்துள்ளார். அவர் மீதும் அரிவாள் வெட்டுக்கள் விழுந்துள்ளன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vck ad_2.jpg)
இந்த நேரத்தில்அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைக் கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீசார், தமிழரசனையும், அவரின் தாய் விமலாவையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அங்கிருந்து தமிழரசன் மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆண்டிமடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், சந்தேகத்தின் பேரில் சரோஜாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், “தமிழரசனை நல்லவன் என நம்பி, எனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தேன். ஆனால், ஈவு இரக்கமற்ற முறையில் என் மகளை கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்ற தமிழரசன் மூன்று மாதத்தில் ஜாமினில் வெளியே வந்து என் கண்ணெதிரே ஜாலியாக ஊரில் வலம் வந்தார்.
இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் மகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி தமிழரசனை தீர்த்துக்கட்டமுடிவு செய்தேன். புடவை கட்டிக்கொண்டு பெண்ணாக சென்றால் என்னை அடையாளம் கண்டுபிடித்து விடுவார்களென, நான் பேண்ட் டீ சர்ட் போட்டுக் கொண்டு ஒரு ஆணைப் போல் அரிவாளுடன் சென்று தூங்கிக் கொண்டிருந்த தமிழரசனை எழுப்பி வெட்டினேன். தடுக்க வந்த அவரது தாய் மீதும் வெட்டு விழுந்தது. அதற்குள் கும்பல் கூடியதை பார்த்து அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன்” என்று வாக்கு மூலம் அளித்துள்ளார்.
Follow Us