Advertisment

பழைய காதலனை கரம்பிடிக்க பெற்ற குழந்தையை கொன்ற தாய்!!

காதலனை கரம்பிடிக்க இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை பெற்ற தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கரூர் மாவட்டம் குளித்தலையில் அரங்கேறியுள்ளது.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த பரளி என்ற கிராமத்தில் உள்ள ரம்யாவுக்கும் திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கொலைக்குடியைசேர்ந்த தங்கதுரை என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடந்த மூன்றாம் மாதமே ரம்யா தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி இருந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போதுகுழந்தைக்கு மூன்று வயது.

Advertisment

 Mother killed her child to get older lover

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் பதறிய அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி வீட்டிற்குள் சென்று பார்க்கையில் குழந்தை கழுத்தை நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. அதேபோல் ரம்யாவும் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்த குளித்தலை போலீசார் அவரை கைப்பற்றினர்.

 Mother killed her child to get older lover

சம்பந்தப்பட்ட ரம்யாவை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் அவரிடையே நடத்திய விசாரணையில், அவர் திருமணத்திற்கு முன்பே வீட்டின் அருகிலுள்ள மணிமாறன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரஅவருக்கு அவசரமாக திருமணம் நடைபெற்றதாகவும் தெரியவந்துள்ளது. அதனை அடுத்த குடும்பத்தார் திருமணம் செய்து வைத்த நபருடன் வாழ்ந்துவந்த ரம்யா மூன்றே மாதத்திலேயேபிடிக்கவில்லை என கர்ப்பமான நிலையில்தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

 Mother killed her child to get older lover

இப்படி தாய் வீட்டிற்கு வந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் பழைய காதலனை சந்தித்த ரம்யா அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட மூன்று வயது பெண் குழந்தை இடையூறாக இருப்பதாக பழைய காதலன் மணிமாறன் தெரிவிக்க அவனின் ஆலோசனைப்படி குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுள்ளாள் ரம்யா. குழந்தையை கொன்ற பின் எங்கே மாட்டிக்கொள்ளவோமோ என பதறிய ரம்யா தானும் இறந்துவிடலாம் என தற்கொலைக்கு முடிவெடுத்துள்ளார்.

 Mother killed her child to get older lover

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இப்படி பழைய காதலனுடன் வாழ, பெற்ற குழந்தையை தாயே ஈவு இரக்கமின்று கழுத்தைநெரித்து கொன்ற சம்பவம் அங்குபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அண்மையில்சென்னையில் அபிராமி என்ற பெண் கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற சம்பவம் இதேபோல் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

child murder mother karur murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe