/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murder_17.jpg)
சென்னை ஆலந்தூரில் 13வயது மகனை கொன்ற தாய் பத்மா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பார்வையற்ற மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவில் மகன் பரத்தின் முகத்தை பிளாஸ்டிக் பையினால் மூடி, மூச்சு முட்டி சாகடித்துவிட்டார் பத்மா. பின்னர் அவர் தற்கொலை முயற்சியில் இருந்தபோது காப்பாற்றப்பட்டார். இதனையடுத்து போலீசார் மகனை கொன்றதற்காக பத்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கணவரால் கைவிடப்பட்ட பத்மா, ஆதரவற்ற விரக்தியில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அஜீத் நடித்த ஆசை படத்தில் பிரகாஷ்ராஜ் தனது மனைவி ரோகிணியை பிளாஸ்டிக் பையினால் மூடி மூச்சு முட்டி சாகடிப்போல நடந்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)