Advertisment

மகனுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட தாய்; தங்கச்சங்கிலியுடன் கைது 

Mother involved in robbery with son; Arrested with gold chain

Advertisment

புதுச்சேரியில் நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து ஒரு லட்சத்து இருபதாயிரம் மதிப்பிலான தங்கத்தை திருடிச் சென்ற தாய் மற்றும் மகனை காவலர்கள் கைது செய்தனர்.

புதுச்சேரியில் நகரப்பகுதியான செட்டிதெருவில் ராஜா என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 21ம் தேதி ராஜாவின் கடைக்கு வந்த ஒரு பெண் மற்றும் அவரது மகன் நகைகள் வாங்குவது குறித்து நகைக்கடையில் இருந்தவர்களிடம் பேசிவிட்டு சென்றுள்ளனர்.

அவர்களே மீண்டும் அடுத்த நாள் வந்து நகைகள் வாங்குவது குறித்து பேசி நகைகளை காட்டசொல்லியுள்ளனர். கடையில் இருந்த மேலாளர் நகையைக் காட்டியபோது கண்ணாடிப் பேழைக்குள் தொங்கவிடப்பட்டிருந்த நகைகளைக் காட்டி அதை எடுக்கச் சொல்லியுள்ளனர்.

Advertisment

இதன் மூலம் கடை மேலாளரின்கவனத்தை திசை திருப்பி 16 கிராம் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பினர். அவர்களைப் பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தாய் பெயர் சுப்புலட்சுமி என்றும் அவரது மகன் பாலகுமரன் என்பதும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

gold Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe