Advertisment

மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

mother her three children in critical near pondicherry

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் உள்ள குமுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம்(40). லாரி ஓட்டுநர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 13, 9, 3 ஆகிய வயதுகளில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி ஓட்டுநரான அருணாச்சலம், சமீபத்தில் சொந்தமாக லாரி வாங்கியுள்ளார். அதேசமயம், சமீபமாக அவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அருணாச்சலம், கலித்தீரம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி அங்கு தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான அவருக்கு கடன் ஏற்பட்டு அதனால், தனது லாரியையும் விற்றுள்ளார். மேலும், அருணாச்சலம் மது அருந்திவிட்டு தினமும் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் மது அருந்திவிட்டு வந்த அருணாச்சலம் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனமுடைந்த சாந்தி, சாப்பாட்டில் விஷம் கலந்து தனது மூன்று குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, தானும் சாப்பிட்டிருக்கிறார்.

Advertisment

சிறிது நேரத்தில் அருணாச்சலம் வீட்டிலிருந்து சத்தம் ஏதும் வராததால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, சாந்தி மற்றும் அவரது மூன்று குழந்தைகளும் மயக்கமடைந்து கிடந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக அவர்களை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police Viluppuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe