
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தாய் இறந்ததாக போலி வாரிசு சான்றிதழ் வாங்கி பூர்வீகச் சொத்தை கிரயம் செய்ய போலி ஆவணம் தயார் செய்து மகன் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவாடானை அருகே கடம்பூர் கிராமத்தை சேர்ந்த துரைராஜ். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மனைவி பூச்செண்டு 66 மகன் சிவகுமார் 40 மற்றும் மகள்கள் சித்ராதேவி ரேணுகா உள்ளார்கள்.
இவர்களும் துரைராஜிக்கு வாரிசுகளாக இருந்த நிலையில், இவரது மகன் சிவகுமார் தனது தாய் இறந்தது விட்டதாகவும், என்னைத் தவிர வேறு வாரிசு இல்லை என இதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் மகன் பால்சாமி, குட்டி உடையார் மகன் காசிராமு ஆகியோர் உடந்தையுடன் திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற்று, துரைராஜின் சொத்தை
இதே கிராமத்தை சேர்ந்த சிங்காரம் என்பவரது மகன் ரவிச்சந்திரன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இது தெரிந்து மற்றவர்கள் தட்டிக் கேட்ட பொழுது
மேலும் மேற்படி கொலை செய்து விடுவதாக மிரட்டப்பட்டிருக்கிறார் தாய் பூச்செண்டு.!!
இது குறித்து பூச்செண்டு திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, புகாரின் பேரில் விசாரணை செய்த திருவாடானை காவல் நிலைய ஆய்வாளர் புவனேஷ்வரி, சிவக்குமார் சிங்கார மகன்கள் ரவிச்சந்திரன் பால்ச்சாமி மற்றும் குட்டி உடையார் மகன் காசிராமு ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.