/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/trxh.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நீலகிரி மாவட்டம்கோத்தகிரியில் அண்மையில் ஊருக்குள் கரடிகள் நடமாட்டம் அதிமாகியுள்ள நிலையில் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் ஜெகன்நாதன் என்பவரின் வீட்டிற்குள்ஒரு கரடி தனது இருக்குட்டிகளுடன் வந்துள்ளது. அப்போது வீட்டினுள் இருந்தவர்கள் அலறி பயத்தில் கத்த ஆரம்பித்தனர் இதனால் தாய் கரடி தனது இரண்டு கரடி குட்டிகளுடன் வெளியே ஓடியது. அப்போது ஒரு கரடி குட்டி மட்டும் ஜெகன்நாதன் வீட்டின் முன்புறம் இருந்த இரும்பு கேட்டிற்குள் தலை மாட்டி சிக்கிக்கொண்டது. அவரது வீடு சாலை ஓரத்திலே இருந்ததால் ரோட்டில் நின்ற தாய் கரடி தனது குட்டியை மீட்க போராடியது.அந்த ரோட்டில் யாரும் செல்லாதவண்ணம் நாடு ரோட்டில் நின்று அங்கும் இங்கும் ஓடி சத்தமிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rdfefeffs.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgvfdgvfdvgfd.jpg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த தகவல் வனத்துறைக்கு தெரியவர அங்கு விரைந்து வந்த வனத்துறையினர்தீப்பந்தம் மூலம் அந்த தாய் கரடி உட்பட இரண்டு கரடிகளையும் துரத்தி பின்னர் அந்த இரும்பு கேட்டை உடைத்து குட்டிக்கரடியை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தாய் கரடியின் போராட்டம் வனத்துறையினரின் மீட்பு போன்றவை சிறிது நேரத்தில் அந்த பகுதியில் ஒரு பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)