Advertisment

“அப்பாவ நம்பாதடா; என் சாவுக்கு அவர்தான் காரணம்” - மகனுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

Mother attend tragedy after sending audio to son

சிவகங்கை மாவட்டம் கருதுபட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். 40 வயதான பாண்டியன் கருதுபட்டியில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வந்துள்ளார். பாண்டியனின் மனைவி மகேஸ்வரி. இத்தம்பதிக்கு 16 மற்றும் 9 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

Advertisment

பாண்டியன் தனியாக மினரல் வாட்டர் கம்பெனியை துவங்குவதற்கு முன் தன் மகன்களின் கல்விக்காக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஊரில் கம்பெனியைத்துவங்கியதும் பாண்டியன் தனது சொந்த ஊரிலேயே தங்கிவிட்டார். மகேஸ்வரி தனது மகன்களின் கல்விக்காக சென்னையில் வசித்து வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் மகேஸ்வரிக்கு தனது கணவர் பாண்டியனின் நடத்தையில் சந்தேகம் வந்ததாகவும் இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன் தனது இளைய மகனுடன் கருதுபட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அன்றும் தனது கணவனுடன் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால் மனமுடைந்த மகேஸ்வரி தற்கொலை செய்ய தீர்மானித்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மூத்த மகனுக்கு வாட்ஸ்ஆப்பில் குரல் பதிவு ஒன்றையும் மகேஸ்வரி அனுப்பியுள்ளார். அதில், “நான் சாகப் போகிறேன் நீ தம்பியை நல்லபடியாக பார்த்துக் கொள். சென்னையில் உள்ள நம் பிளாட்டை விற்று நீயும் நன்கு படித்து தம்பியையும் படிக்க வைத்து விடு. மாமா சிவா சொல்வதைக் கேள். என்னை மன்னித்து விடு. உங்க அப்பாவை நம்பாதே. என் சாவுக்கு அவர்தான்காரணம்” என அழுதுகொண்டே கூறியுள்ளார். இதன் பின் மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆடியோவை கைப்பற்றிய சிவகங்கை காவல்துறையினர் பாண்டியனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

police sivagangai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe