Mother arrested for video incident

Advertisment

விழுப்புரம் அருகே பெற்ற குழந்தையை தாய் கொடூரமாக தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூரை சேர்ந்ததுளசி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோ அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனத்தை பெற்றது. இந்நிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கருத்துவேறுபட்டால்கணவன்வடிவழகனைபிரிந்து தவறான தொடர்பில் ஒருவருடன் இருந்த துளசிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி கைது செய்யப்பட்டுள்ளார்.