
ஆண் குழந்தையை விற்ற வழக்கில் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஆண் குழந்தையை 3.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில்,ஏற்கனவே தந்தை உட்பட 4 பேர் கைதான நிலையில் தற்போது தாய் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாழம் பள்ளம் கிராமத்தில் பவானி என்பவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவரது குழந்தை விற்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், கணவர் சரத்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் பவானி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். கணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தாயும் சேர்ந்து குழந்தையை விற்றது தெரியவந்தது. சென்னையைச் சேர்ந்தவர்களிடமிருந்து விற்கப்பட்ட குழந்தையை மீட்ட நிலையில், போலீசார் நாடகமாடிய தாய் பவானியையும் தற்போது கைது செய்தனர்.
  
 Follow Us