Advertisment

தாய், மகன் பரிதாபமாக உயிரிழப்பு; தீவிர விசாரணையில் போலீஸ்

Mother and son passed away after falling into a well

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கௌரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா(26). இந்த தம்பதிக்கு அதியமான்(5) என்ற மகனும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

Advertisment

இந்த நிலையில் இன்று காலை விவசாய நிலத்திற்கு சங்கீதா தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது விவசாய நிலத்தில் உள்ள தரை கிணற்றில் சங்கீதா மற்றும் குழந்தைகள் விழுந்துள்ளனர். இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த சங்கீதாவின் மாமனார் மற்றும் அக்கம் பக்கத்தினர் கிணற்றின் கரையோரம் காயத்துடன் இருந்த ஒன்று வயது பெண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, கிணற்றில் இருந்த சங்கீதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் போராடி கிணற்றில் இருந்த சிறுவன் அதியமானை சடலமாக மீட்டனர். இதையடுத்து, சங்கீதா மற்றும் சிறுவன் அதியமான் ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாய நிலத்திற்கு சென்ற போது சங்கீதா குழந்தைகளுடன் தவறி கிணற்றில் விழுந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாய் மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

mother police Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe