Mother and father drinking pesticide as daughter went with boyfriend

Advertisment

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேவேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (65). இவரின்முதல் இரண்டு மனைவிகள் இறந்ததைத்தொடர்ந்து தனது மூன்றாவது மனைவிசுமதி என்பவரோடு வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 19 வயதுடைய செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் உள்ளது. இவருக்கும் பெரியாண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் வரும் 20ஆம் தேதிதிருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாகஇருந்தது.

இந்நிலையில் நேற்று (17.11.2022)காலை கல்லூரிக்குச் சென்ற செல்வி,தான் ஏற்கனவே காதலித்து வந்தவேலங்கிப்பட்டுகிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருடன் சென்றுவிட்டதால், தாய் தந்தை இருவரும்வயலில் நெல்லுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தைத்தண்ணீரில் கலந்து குடித்துத்தற்கொலை செய்து கொண்டனர்.

இதனையடுத்துஅவரது மகன் சந்திரசேகர் என்பவர் அம்மா அப்பாவைக் காணவில்லை என்று தேடிச் சென்றபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து சடலத்தை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.