Skip to main content

6 வயது மகனை கொன்றுவிட்டு தாய், தந்தை தற்கொலை

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

Mother and father committed tragedy by their 6-year-old son

 

வாலாஜாபாத் அடுத்த அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன். 34 வயதான கலையரசன் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சமையல் ஆர்டர்களை எடுத்து செய்து வந்தார். அவரது மனைவி நித்யா. 30 வயதான நித்யாவிற்கும் கலையரசனுக்கும் ஹேமந்த் குமார் என்ற 6 வயது மகன் உள்ளார்.

 

சில தினங்கள் முன்பு குடும்பத்துடன் திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு வாசனாம்பட்டு பகுதியில் உள்ள தன் மனைவியின் வீட்டுக்கு சென்ற கலையரசன் ஓரிரு நாட்கள் அங்கேயே தங்கி இருந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் அனைவரும் இரவு உணவை முடித்துவிட்டு தூங்கச் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் இருந்த அறையின் கதவு திறக்கப்படாததால் நித்யாவின் தந்தை கதவைத் தட்டியுள்ளார். நெடுநேரமாகியும் நித்யா மற்றும் கலையரசன் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த நித்யாவின் பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அறையில் கலையரசன் மற்றும் நித்யா இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் பேரன் ஹேமந்த் குமாரும் விஷம் கொடுக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார்.

 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலையரசன் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏன் என விசாரித்து வருகின்றனர். கேட்டரிங் தொழில் சரியாக இல்லாததால் குடும்பம் நடத்த கலையரசன் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் பிறகே அவரது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறியிருந்தனர். மேலும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பெற்ற மகனையே கொன்றுவிட்டு கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மாநில நிர்வாகி வீட்டில் பறக்கும்படை சோதனை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Air force raids BJP state executive's house


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. அதேநேரம் தேர்தல் பறக்கும் படை பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மாநில நிர்வாகி ஒருவர் வீட்டில் பறக்கும் படை திடீர் சோதனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஓபிசி அணி மாநிலச் செயலாளர் கே.ஆர்.வெங்கடேசன் என்பவர் வீட்டில் பறக்கும் படையானது சோதனை நடத்தி வருகிறது. திருவள்ளூரில் பாஜக சார்பில் பணம் பட்டுவாடா செய்வதற்காக நிர்வாகி வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து,  பாடிய நல்லூரில் உள்ள வெங்கடேஷ் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.