Mother and daughter tragically lost their lives in a road accident

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்த கே. சாத்தனூர், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் யாஸ்மின். அவரது மகள் ரெஜினா இருவரும் இரு சக்கர வாகனத்தில் இன்று மாலை கரூர் நோக்கிச் சென்றுள்ளனர். கரூரில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில் காரும், இருசக்கர வாகனமும், குளித்தலை அருகே ராஜேந்திரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் யாஸ்மின், மற்றும் அவரது மகள் ரெஜினா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

Advertisment

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு குளித்தலை தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாய் யாஸ்மின் உயிரிழந்தார். அவரது மகள் ரெஜினா,மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.