Mother and daughter passes away in thiruvarur

திருவாரூர் அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. உடல்களை மீட்டு கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisment

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட விஷ்ணு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (65). இவரது மகள் ஜோதி (40),கணவனைப் பிரிந்து வாழ்ந்துவருகிறார். ஜோதியும்தமிழரசியும் தனியாக இருந்துவந்தனர். இவர்கள் ஜோதியின் அக்காள் மகன் முகிலன் 19 என்பவரை வளர்த்துவருகின்றனர். ஜோதி தனியார் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், இன்று (21.05.2021) மதியம் முகிலன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜோதியும்தமிழரசியும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கியுள்ளனர். மேலும், வீடு முழுவதும் ரத்தக்கரை இருந்துள்ளது. பதறித்துடித்து உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்து, அவர்கள் மூலம் தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இருவரது மரணம் கொலையா ? தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.