Skip to main content

நிதி நிறுவனம் கொடுத்த நெருக்கடி; குடும்பமே தற்கொலை செய்துகொண்ட கொடூரம்!

Published on 07/08/2024 | Edited on 07/08/2024
Mother and daughter lost their life due to debt problem of finance company

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் கற்பகம் (42). இவரது மகள் சுபிக்ஷா (17). கற்பத்தின் கணவர் குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வந்துள்ளார். அப்போது தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து, கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான குகநாதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதையடுத்து, “உன் கணவர் வாங்கிய கடனை நீ திருப்பி கொடு; இல்லை என்றால் உன் பொண்ணு கொடுக்கட்டும்” எனச் சொல்லி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அந்த பெண்மணியையும் அவரது மகளையும் டார்ச்சர் செய்து வந்துள்ளனர். தொடர்ந்து இவரது மனைவி கற்பகத்தையும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தொந்தரவு செய்ததால் சொந்த வீட்டில் இருந்து கோடியூர் பகுதியில் உள்ள வாடகைக்கு வீட்டுக்குச் சென்ற கற்பகம் மற்றும் அவரது மகள் சுபிக்ஷா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடன் கேட்டு வந்த நபர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் தாய் கற்பகம், மகள் ஆகிய இருவரும் குகநாதன் இறந்த துக்கத்திலும், கடன் பிரச்சனை காரணமாகவும் மன உளைச்சலிலும் இது போன்ற விபரீத முடிவு எடுத்துள்ளனர் என்று போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.