Mother and daughter found in agricultural well in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ளது பூலம்பாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜெகதீசன், அவர் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு சென்றுஅங்கு விவசாய கிணற்றில் தண்ணீர் இரைப்பதற்காக சென்று பார்த்தபோது கிணற்றில் இருவர்பிணமாக மிதந்துள்ளனர்.இதனைக்கண்டு பதறிப்போன ஜெகதீசன் ஊரில் உள்ளவர்களுக்கு தகவல் கூறினார்.

Advertisment

இதையடுத்து அரும்பாவூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் ஜெகதீசன் விவசாயக்கிணற்றிற்குசென்றனர். அங்கு பிணமாக மிதந்த தாயையும், மகளையும் வெளியே எடுத்தனர். சடலமாகமிதந்த அந்தப்பெண் அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி மரியம் பிரின்ஸ் என்பதும், அவரது ஆறு வயது குழந்தை தனுஷ்கா ஆகிய இருவரும் கிணற்றில் பிணமாக மிதந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்.

Advertisment

இரு உடல்களையும் அரும்பாவூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதே ஊரைச் சேர்ந்தவர் குமார் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மரியம் பிரின்ஸ் இவர்களுக்கு எட்டு வயதில் தருண் என்ற ஆண் குழந்தையும்,ஆறு வயதில் தனுஷ்கா என்ற பெண் குழந்தையும் இருந்தனர். குமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புமரியம் பிரின்ஸ் தனது பெண் குழந்தை அனுஷ்காவுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரையும், குழந்தையையும் அவரது குடும்பத்தினர் அவரது உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

அதையடுத்து காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று காலை தாயும், மகளும் ஜெகதீசன் என்பவரது விவசாய கிணற்றில் சடலமாகமீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலையா? குடும்பத்தில் ஏதாவது பிரச்சனையா? இவர்கள் மரணத்திற்குஎன்ன காரணம் இப்படி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment