Advertisment

2 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட் சூடு... தாய் மற்றும் காதலன் குண்டர் சட்டத்தில் கைது!

வேலூர் மாவட்டம் ஆரியூரில் கணவனை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்துவந்த பெண்ணும்அவரின் கள்ளகாதலனும் சேர்ந்து 2 வயது குழந்தைக்கு சிகரெட்டில் உடல் முழுவது சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்டதில் இருவரும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Advertisment

VELLORE

வேலூர் ஆரியூரில் பெண் ஒருவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரது இரண்டு வயது பெண் குழந்தையை தாயிடம் விட்டுவிட்டு அந்த பெண் அருகிலுள்ள மொபைல் கடை ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கடையில் வேலை செய்யும் உதயக்குமார் என்பவனுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து இருவரும்உல்லாசமாக ஊர் சுற்றித் திரிவதை தெரிந்துகொண்ட அந்த பெண்ணின் தாய் கண்டித்த நிலையில் தனியாக வீடெடுத்து தங்கினார் அந்த பெண். அடிக்கடி உதயகுமாரும் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளான்.

Advertisment

VELLORE

நிலைமை இப்படி இருக்க, தாய் இறந்துவிட்ட நிலையில் தனது குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் அந்த பெண். காதலன் உதயகுமாருக்கு அந்த சிறுமியின் வருகை இடையூறை ஏற்படுத்தியிருக்கிறது.இப்படி இருக்க இருவரும் உல்லாசமாக இருந்ததை அந்த குழந்தை பார்த்துவிட குழந்தையை தீர்த்து கட்ட நினைத்த உதயகுமார் இரண்டு வயது குழந்தை என்றும் பாராமல் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்துள்ளான். இதிலும் கொடுமை தாயான அந்த பெண் இதனை கண்டிக்காமல் உடந்தையாக இருந்ததுதான்.

Mother and boyfriend arrested in thug act....

இந்த விஷயம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவர குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சிகரெட் காயங்களுடன் அந்த குழந்தை மீட்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் சிறுமி உடலின் எல்லா இடங்களிலும் மிருகத்தனமாகசிகரெட்டால் சுடப்பட்டு ரணம் ரணமாக புண்கள் காணப்பட்டது. சிறுமி எழுந்து ஓடி விடக்கூடாது என்பதற்காக பாதத்திலும் சூடு வைக்கப்பட்டிருந்தது. வைக்கப்பட்ட காயங்கள் ரண ரணமாக இருக்க மரக்குச்சியை வைத்து கிளறி வைத்த கொடூரமும் கண்டுபிடிக்கப்பட்டது.

Mother and boyfriend arrested in thug act....

இந்த மிருக்கத்தனமான சித்திரவதையை செய்த உதயகுமார் மீதும், அந்த தாய் மீதும் ஆரியூர் காவல்நிலையத்தில் குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து தலைமைறைவாக இருந்த உதயகுமாரை இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு போக்ஸோ சட்டத்தில் போலீசார்கைது செய்தனர்.

இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

humanity gone. arrest police Vellore Sexual Abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe