Advertisment

இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை முயற்சி 

Mother also attempt try to lost their life after incident two children

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி தாமோதரன். இவரது மனைவி 28 வயது பாரதி. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தை உள்ளனர். அதில் ஒரு குழந்தை பிறந்து 8 மாதமே ஆகிறது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதில் கணவர் மீது கடும் ஆத்திரம் அடைந்த பாரதி உடனே தன் 10 வயது குழந்தை சஞ்சய், எட்டு வயது மதியழகி ஆகிய இரு குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் அந்த விஷத்தை குடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மூவரும் மயங்கி வீட்டிலேயே கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்து மூவரையும் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இரண்டு குழந்தைகளும் சேலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

தாய் பாரதிக்குமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் தஸ்தகீர் வட பொன்பரப்பி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்த 8 மாத ஆண் குழந்தைக்கு மட்டும் பாரதி விஷம் கொடுக்காமல் உயிரோடு விட்டு வைத்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அதிலும் இரண்டு குழந்தைகள் விஷம் குடித்து இறந்த சம்பவம் மல்லாபுரம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

police mother
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe