
தற்கொலை முடிவால் ஒரே நேரத்தில் நான்கு உயிர்கள் பறிபோயிருக்கின்றன. விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பு பகுதியில் இப்படியொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் – வத்திராயிருப்பு அருகிலுள்ள கோட்டையூரைச் சேர்ந்த விவசாயியான ஈஸ்வரன், மனைவி பாண்டீஸ்வரி, மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, மகன் விக்னேஸ்வரன் ஆகியோருடன்நல்லபடியாகவாழ்ந்து வந்தார். சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்த ஈஸ்வரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த ஈஸ்வரன், கடந்த 15-ஆம் தேதி இறந்து போனார்.

கணவர் ஈஸ்வரன் இறந்ததிலிருந்து‘எப்படி குழந்தைகளை வளர்க்கப்போகிறேன்? குடும்பத் தலைவன் இல்லாமல் எப்படி வாழப்போகிறோம்?’ எனபாண்டீஸ்வரி அழுதபடியே இருந்திருக்கிறார். உறவினர்கள் ஆறுதல் கூறிய நிலையிலும், குழந்தைகளோடு தற்கொலை செய்து கொள்ளும் முடிவை அவர் எடுத்துள்ளார்.
துக்கமும் விரக்தியும் மேலிட பாண்டீஸ்வரி, தனது மூன்று குழந்தைகளுடன்தங்களுக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையினரும் பொதுமக்களும் சம்பவ இடமான அந்தக் கிணற்றுப் பகுதிக்குச் சென்று நால்வர் உடலையும் மீட்டனர். இதனைத்தொடர்ந்து,உடற்கூறாய்வுக்காக நான்கு உடல்களும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வழக்குப் பதிவு செய்துள்ள வத்திராயிருப்பு காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)