A mother with 2 daughters who made a tragic decision; Shocked at the investigation

Advertisment

குடும்ப வறுமை மற்றும் உடல்நலக் குறைவால் தாய் தனது இரு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகுபுரம் அருகில் உள்ள இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாசன். இவரது மனைவி அனிதா. ஏசுதாசன் - அனிதா தம்பதியினருக்கு சகாயதிவ்யா (19) மற்றும் பூஜா (16) என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பே கணவர் ஏசுதாசன் இறந்துவிட்டார். இரண்டு மகள்களையும் தாய் அனிதா வளர்த்து வந்தார்.சகாய திவ்யா அஞ்சு கிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். இளைய மகள் பூஜா பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை முதல் அனிதாவின் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்குத்தகவல் கொடுத்தனர். உடனடியாக அனிதாவின் வீட்டிற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது உள்ளே சகாய திவ்யா, பூஜா ஆகிய இரு மகள்களுடன் தாய் அனிதா தூக்கிட்டநிலையில் உயிரிழந்து கிடந்தார். மூன்று பேர் உடல்களையும் மீட்ட போலீசார், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் இதுகுறித்து விசாரிக்கையில், தாய் அனிதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாலும், குடும்பவறுமை காரணமாகவும்அடிக்கடிவிரக்தியில் தற்கொலை செய்துகொள்வதாககூறுவார் என்றதகவல்போலீசாருக்குகிடைத்தது. நான் இறந்து விட்டால் எனது இரண்டு மகள்களும் அனாதையாகி விடுவார்கள் என நினைத்து மூன்று பேரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.