eps

மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாலே தமிழகத்திற்கு அதிகளவிலான திட்டங்கள் கிடைக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

சேலம் - சென்னை இடையே விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, மக்களுக்காகவே மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கம் காட்டி வருகிறது. மத்திய அரசுடன் இணைந்து இருப்பதனாலேயே மக்களுக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும். மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதனால் தமிழகத்திற்கு அதிகளவிலான திட்டங்கள் கிடைத்து கொண்டிருக்கின்றன.

மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. இந்த சேலம் விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய ரக விமானங்களும் இயக்கப்படும். பசுமை விரைவு வழித்தடம் அமைந்து விட்டால் 3 மணிநேரத்தில் சென்னையில் இருந்து சேலம் அடையலாம்.

Advertisment

விமானத்தில் பயணிப்பது என்பது ஏழை, எளிய மக்களுக்கு எட்டாத கனியாக இருக்கிறது. குறைவான செலவில் ஏழை, எளியோர் பயணம் செய்யும் வகையில் இந்த சேவை அமையும். இந்த விமான சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி என பேசியுள்ளார்.