Skip to main content

''மோஸ்ட் ஹெட்ஸ் ப்ரைடேட் இன் 24 ஹவர்ஸ்'' - உலக சாதனை படைத்த சென்னை பெண்மணி

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

சென்னையில் 24மணி நேரம் தொடர்ந்து 167 பெண்களுக்கு சடைபின்னி உலக சாதனை மூலம் கூந்தலின் அவசியம் பற்றியும், நமது பாரம்பரிய அழகு கலை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன்.



நமது கலாச்சார மற்றத்தாலும், உணவு பழக்க வழக்கங்களாலும் ஆரோக்கியம் குறைந்து பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள் தங்களது கூந்தலை இழந்து வருகின்றனர். நவீன காலத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதால் கூந்தலின் மீது அக்கறை குறைந்துவிட்ட இன்றைய இளம் தலைமுறை பெண்கள் சடை பின்னுவதை  அவமானமாகவும், மிக சிரமமாகவும் நினைப்பதால் 70 சாதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நீளமான கூந்தலை வளர்க்க விரும்புவதில்லை. இதனால் நமது பாபரமரியமான அழகு காலையில் ஒன்றான சடை பின்னுதல் அழிய தொடங்கி வருகிறது.
 

"Most Head's Braided in 24 Hours" new world recordof  Chennai woman

 

ஆங்காங்கே திருமண சடங்குகளிலும், சுப நிகழ்வுகளிலும் காட்சியளிக்கும் சடைகளும்கூட ரெடிமேட் சடைகள், அல்லது போலி (சவுரி) முடியினை வைத்து அழகு படுத்தப்படுத்தபட்ட சடைகளாகவே இருக்கிறது.மேலை நாட்டு கலாச்சாரம் இப்போது படிப்படியாக நம் தமிழ் பெண்கள் தலைகளிலும் கை வைக்க தொடங்கிவிட்டது என்பது நாம் வருந்தவேண்டிய விஷயம்.
 

 

சடை பின்னுதல் குறித்த விழிப்புணர்வை வரும் தலைமுறையினருக்கு கொண்டுசேர்க்கும் விதமாக இந்த உலக சாதனை நிகழ்வு சென்னையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. சரியாக 7ஆம் தேதி மாலை 7.15pm மணிக்கு தொடங்கி 8ஆம் தேதி மாலை 7.15 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து 24 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்வின் இறுதியில் 167 பேருக்கு தலைமுடி பின்னப்பட்டது.
 

"Most Head's Braided in 24 Hours" new world recordof  Chennai woman

 

இந்த உலக சாதனை நிகழ்வானது முறையாக  கின்னஸ், மற்றும் யுனிக் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் பதிவுசெய்து நடத்தப்பட்டது, அதன் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளை சரியாக பின்பற்றி  சடைபின்னுதல் சரியான முறையில் பின்னப்பட்டதா என்பதை "அனைத்து இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அழகு கலை நிபுணர்கள்" நேரடியாக  காண்காணித்தனர். கூடுதலாக இந்த உலக சாதனை முயற்சியின் காட்சி ஆதாரத்திருக்காக 6 வீடியோ கேமராக்கள், 4சிசிடிவி கேமராக்கள் என 10க்கும் மேற்பட்ட கேமராக்களை கொண்டு வெவ்வேறு கோணங்களில் 24நேரமும் பதிவு செய்யப்பட்டது. சாதனை நிகழ்வின் இறுதியில் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின் இதனை புதிய உலக சாதனை ''மோஸ்ட் ஹெட்ஸ் ப்ரைடேட் இன் 24 ஹவர்ஸ்''  என  பதிவு செய்தும், 

 

வாசுகி மணிவண்ணன்-ஐ உலக சாதனையாளராக அங்கீகரித்தும், உலக சாதனை சான்றிதழினை "Unique World Records Limited"-ன் தலைமை தீர்ப்பாளர் மற்றும் "சாதனை சிகரம் கிரியேஷன்ஸ்" தலைவர் திரு.ரஹ்மான் வழங்கி கெளரவித்தார்.

 

அத்துடன் "அனைத்து இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை சங்கத்தின் தலைவர் "திருமதி.சங்கீதா சவ்ஹான்" மற்றும் தமிழக தலைவர் முத்து லட்சுமி, Natural's அழகு நிலையம் உரிமையாளர் திருமதி வீணா, மஹா பியூட்டி அகாடெமி  இயக்குனர். மஹா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்சியை சிறப்பித்தனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை கண்டுகளித்ததுடன் சாதனையாளரை உற்சாகபடுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.