Mortgage shop owners' association files complaint against police action

Advertisment

திருச்சி நவல்பட்டு சாலையில் பெல் பைனான்ஸ் என்ற நகை அடமான கடை நடத்தி வருபவர் மணிகண்டன். இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட போலீசார் அவர் திருட்டு நகைகளை வாங்குவதாக கூறி விசாரணை நடத்தினர். மேலும் அவரை அருகிலுள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

அவர் அணிந்திருந்த நகை மற்றும் ரசீதுக்கான நகை உட்பட 6.45 சவரன் நகைகளை நாமக்கல் போலீசார் பறிமுதல் செய்து சென்றனர். மேலும் நகைகளை பறிமுதல் செய்ததற்கு எழுதி கொடுக்காமல் நாமக்கல் போலீசார் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த நகை அடமான கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் நாமக்கல் போலீசாரின் அத்துமீறலை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருவெறும்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

போலீசாரின் இத்தகைய நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், நாமக்கல் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளனர்.