தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. அதேபோல், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்துவருகிறது. கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னையின் புறகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்துவருகிறது.