காலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர்... மாலையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

 Morning assembly session ... DMK MLAs meeting in the evening!

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு துவங்க இருக்கிறது. புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தமிழக சட்டப்பேரவை கூட இருக்கிறது. கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.

அதேபோல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Meeting
இதையும் படியுங்கள்
Subscribe