விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக பா.ஜ.க உட்பட பல இந்து முன்னணி அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதேசமயம் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றன. அதே வேளையில் விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் ராஜேந்திரன், அனுமந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவரை மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தடுத்து நிறுத்தி கைது செய்தார். மேலும் அவருடன் வந்த 300க்கும் மேற்பட்ட பாஜகவினரையும் கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் காவல்துறையினர் அடைத்துள்ளனர். மேலும் பாஜக நிர்வாகிகள் வந்துகொண்டிருப்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.