Advertisment

வாரச்சந்தையில் மூன்று மணி நேரத்தில் ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை! 

More than 5 crore goats sold in the weekly market in three hours

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமை வாரச் சந்தை நடப்பதுவழக்கம். அதன்படி இன்று (12-06-24) நடைபெற்ற இந்த சந்தைக்கு தியாகதுருவம்,திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

பக்ரீத் பண்டிகை வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடுகளின் விற்பனை கலை கட்டியது. காலை ஐந்து மணிக்கு தொடங்கி இந்த சந்தையில் மதுரை, ராமநாதபுரம்,தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம்,ஈரோடு, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள்ஆடுகளை வாங்கி குவித்தனர்.

வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என ரகத்திற்குஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய் 8000 முதல் 25 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த வாரம் இந்த சந்தையில் ரூபாய் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடந்த நிலையில் பக்ரீத் பண்டிகையொட்டி இன்று நடைபெற்ற இதே சந்தையில்,வியாபாரம் தொடங்கி 3 மணி நேரத்திலேயே ரூ.5 கோடிக்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

kallakurichi Market
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe