தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கைஜூலை 19ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில்,மேலும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுவதுதொடர்பாக இன்று (16.07.2021) தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசுப் பேருந்து போக்குவரத்து கிடையாது. ஆனால் புதுச்சேரிக்கு மட்டும் பேருந்து சேவை தொடங்க அனுமதி;மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் திரையரங்குகள் திறக்க தடை;உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 9 மணிவரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கும்;நீச்சல் குளங்களுக்குத் தடை;பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாய, அரசியல் நிகழ்வுகள், திருவிழாக்களுக்குத் தடை;பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெறும் ஆலோசனையில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.