'More than my life...'- Chief Minister's Prize for Speech Contest Winners

Advertisment

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'என் உயிரினும் மேலான...' எனும் தலைப்பில் பேச்சுப் போட்டிக்கான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதழில் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற 'என் உயிரிலும் மேலான...' எனும் தலைப்பிலான பேச்சுப்போட்டி திமுக இளைஞர் அணி சார்பாக நடத்தப்பட்டது. மொத்தமாக 17000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியின்இறுதிப் போட்டியில் மாவட்ட அளவில் பங்கேற்றுவெற்றிபெற்ற 185 பேருக்கு தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் பரிசுகளை வழங்க இருக்கிறார். முன்னதாக போட்டியில் கலந்து கொண்டவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட தமிழக முதல்வர், முத்தமிழறிஞர் பதிப்பகம் சார்பில் ஒன்பது நூல்களையும் வெளியிட்டார்.