
தென்னக ரயில்வே மற்றும் ஐ.சி.எப் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்படுவதாகத்தெற்கு ரயில்வேவைக்கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2008 முதல் 2023 வரை தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும், 1988 முதல் 2023 வரை 25 ஆண்டுகளாக ஐசிஎப் பணிமனையில் தொழில் பழகுநர் முடித்தவர்கள் யாருக்கும் பணி ஆணை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகவும், இதனால் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாகத்தண்டவாளத்தில் இறங்கி ரயில் மறியல் செய்ய இவர்கள் திட்டமிட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி அளிக்காததால் ரயில் நிலையத்தின் உள்ளாகத்தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Follow Us