தமிழகத்தில் 10-ஆவது நாளான இன்றும், 2 ஆயிரத்திற்கும் குறைவாக 1,655 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,69,995 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 12,542 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர்ஜெ. ராதாகிருஷ்ணன், கரானா தடுப்பு நடவடிக்கையாகசி.ஐ.டி நகர்,கனால் பாங்க் சாலை( மீன் சந்தை ) ஆகியவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.முகக்கவசம் சரியாக அணிவதன் அவசியத்தையும்வலியுறுத்தினார். தொற்று குறைந்தாலும் கவனம் என்பது இன்னும் தேவை எனவும்அறிவுறுத்தினார்.

Advertisment