700 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தில்லை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 

More than 700 years old Thillai Amman Temple in Chidambaram

சிதம்பரம் நகரில் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தில்லை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் சிறப்பு பெற்று அதிக அளவில் பெண்கள் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தில்லை அம்மன் கோவிலுக்கும் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள நிலையில் 16 ஆண்டுகள் கடந்து 2023 செப்டம்பர் 4 ஆம் தேதி(இன்று)மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கலந்து கொண்டு கோவில் கும்பத்தில் தண்ணீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், சிதம்பரம் சார் ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் சிவக்குமார், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், அரியலூர் மாவட்ட இணை ஆணையர் நாகராஜ், கடலூர் மாவட்ட துணை ஆணையர் சந்திரன், கோவில் ஆய்வாளர் நரசிங்க பெருமாள், கோவில் செயல் அலுவலர் சரண்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More than 700 years old Thillai Amman Temple in Chidambaram

கும்பாபிஷேக நேரத்தில் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், டிஎஸ்பி ரூபன்குமார் உள்ளிட்ட சிதம்பரம் நகர காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20,000க்கும்மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

temple
இதையும் படியுங்கள்
Subscribe