peacocks are dead

Advertisment

மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ளது சூர்யா நகர். இதனை அடுத்த மருதங்குளம் எனும் பகுதியில் மரங்களும், கண்மாய்களும் உள்ளது. இப்பகுதியில் அதிகப்படியான மயில்கள் வசித்து வருகின்றன. இந்த மயில்களுக்கு அப்பகுதி மக்கள் தானியங்கள் வழங்கி அன்போடு வளர்த்து வந்தனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் அரிசியில் குருணை மருந்து கலந்து தென்னந்தோப்பிற்குள் கொட்டியுள்ளதாக கூறுப்படுகிறது. இன்று அதிகாலையில் வழக்கம்போல் பசியுடன் வந்த மயில்கள் தென்னந்தோப்புக்குள் கிடந்த விஷம் கலந்த அரிசியை சாப்பிட்டுள்ளது. இதனால் அரிசியை சாப்பிட்ட மயில்கள், சாப்பிட்ட சில மணி நேரத்தில் மயங்கி விழுந்தன.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அதிகாரிகள் உயிருக்கு போராடிய மயில்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றி வருகின்றனர். எனினும் 50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்ததால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையடைந்தனர்.