More than 300 people rally with the national flag!

ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாட இருக்கிறோம். பிரதமர் மோடி, 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும். வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், பாஜகவினர் ஆகாங்கே தேசிய கொடியை கொடுத்து வருகின்றனர்.

Advertisment

More than 300 people rally with the national flag!

Advertisment

அந்தவகையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக மகளிர் அணித் தலைவர் சித்ரா, தலைமையில் விழிப்புணர்வு பேரணி திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் தேசியக் கொடியை ஏந்தி, ‘வந்தே மாதரம்.. வந்தே மாதரம்’ என்ற கோஷத்துடன் பேரணியாக சென்றனர். அதன்பின் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு கிழக்கு மாவட்ட தலைவரும், மாநகராட்சி உறுப்பினருமான தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த பேரணியில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.