Advertisment

20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

More than 20 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

Advertisment

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள், எல்லை மீறி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியிலிருந்துசுமார் 400-க்கும் மேற்பட்ட படகுகளுடன் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தநிலையில், அத்துமீறி எல்லை தாண்டி, தங்களின் மீன் வளத்தை அழிப்பதாகவீடியோ ஆதாரங்களோடு, இலங்கை தமிழ் மீனவர்கள் புகாரளித்ததைத்தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது 3 விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

fisherman Rameswaram srilanka tamil
இதையும் படியுங்கள்
Subscribe