/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a7109.jpg)
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பியபோது வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்15க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் சிதம்பரம், கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் தனியார் வேன் ஒன்றில் கொடைக்கானலை சுற்றிப் பார்ப்பதற்காக சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் அவர்கள் பழனி வழியாக திரும்பிக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒருவருக்கு மட்டும் கையில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்தவர்கள் அனைவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)