Skip to main content

ஒரே நேரத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட 15க்கும் மேற்பட்ட நாய்கள்!

Published on 23/11/2018 | Edited on 23/11/2018

வளர்ப்பு பிராணிகளில் எப்போதுமே நாய்க்கு தனி இடமுண்டு. பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும் நாய்க்கு இருக்கும் மதிப்பே தனிதான். நன்றியுள்ளது என்பது மட்டுமல்ல பாதுகாப்பு என்று வந்தால் மிரட்டி எடுக்கும். சிலருக்கு நாய் என்றால் உயிர்! சிலருக்கு அருவெறுப்பு. நாய் மீதான விருப்பம் என்பது ஜீனில் கூட இருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நாய் மீது விருப்பம் கொண்டுள்ளவர்கள் இருக்கிறார்கள். நன்றி உள்ளது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

 

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த மண்ணை எக்ஸ்பிரஸில் இருந்து 1000 கிலோ நாய்க்கறி என்று சர்ச்சை கிளம்பி, கடைசியில் அது ஆட்டுக்கறி என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் திருச்சியின் இதயப்பகுதி என்று வர்ணிக்கப்படும் பாலக்கரை அருகே உள்ள கீழப்புதூர் என்கிற பகுதியில் நேற்று காலையில் வீட்டை திறந்தவர்களுக்கு எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அங்கே உள்ள ஒவ்வொரு தெருக்களிலும் அன்றாடம் அவர்களுக்கு பழக்கமான தெருநாய்கள், கிட்டதட்ட 15 நாய்கள் ஒவ்வொன்றும் மர்மான முறையில் இறந்து கிடந்தது. 

 

dog

 

இதைப்பார்த்த பொதுமக்களுக்கு பெரிய பயத்தை ஏற்படுத்தியது இந்த சம்பவம். காரணம் இப்படி மர்மான முறையில் கொலை செய்திருப்பது திருடுவதற்காகவா?  அல்லது நாய்களின் மேல் உள்ள வெறுப்பில் செய்தார்களா? என்று தெரியாமல் பயம் அதிகரித்தது.

 

இதற்கிடையில் அந்த பகுதி மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் சொல்லவும் உடனே அத்தனை நாய்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். நாம் இதுகுறித்து விசாரணை நடத்தியிருக்கிறார்களா? என்பது குறித்து அறிந்துகொள்ள பாலக்கரை காவல்ஆய்வாளரை தொடர்புகொண்டு விசாரித்தபோது சார்.. இதுவரைக்கு இது குறித்து எந்த புகாரும் வரவில்லை. யாரும் தகவல் சொல்லவில்லை என்றார்.

 

இதேபோல மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் உதவி ஆணையர் துரைமுருகனிடம் இது குறித்து பேசினோம். அவர்கள் சார் இதுவரைக்கு எந்த தகவலும் இல்லை. புகாரும் கொடுக்கவில்லை என்றார். 

 

எதற்காக இத்தனை நாய்களும் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டது என்பது தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடம் விசாரித்த போது…

 

சமீபகாலமாக திருச்சி மாநகராட்சியில் உள்ள நாய்களுக்கு கருத்தடைகள் பண்ணுவதில்லை. இதனால் இனபெருக்கத்தினால் நகரில் முக்கிய வீதிகளில் எல்லாம் நாய்கள் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. இதனால் பொதுமக்கள் பயத்திலே இருந்தனா். சமீபத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் நாய் தொல்லைகள் இருப்பதாக புகார் கொடுத்தனர்.


    

இந்த நிலையில் இத்தனை நாய்கள் ஒரே நாளில் இறந்தது தான் தற்போது பெரிய மர்மாக இருக்கிறது.  

சார்ந்த செய்திகள்