/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a725.jpg)
திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் வில்லூரில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு டோக்கன் அடிப்படையில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
29 பேர் விருதுநகரிலும், 30-க்கும் மேற்பட்டோர் கள்ளிக்குடி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 82 பேர் வில்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பாதிப்பு தொடர்பாக திருமங்கலம் ஏஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)