Advertisment

168 நாட்கள் நடைப்பயணம்; திமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட பாஜகவினர்

More than 100 BJP members joined DMK

பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 28 ஆம் தேதி என் மக்கள் என் நாடு என்ற முழக்கத்துடன் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வரை 168 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச்சந்திக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி பாஜக மாநகர் மாவட்ட வர்த்தகஅணிச் செயலாளர் லோகநாதன் உட்படக் கட்சியின் 100க்கும் மேற்பட்டோர்அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து கட்சியில் இணைந்தவர்களுடன் வாருங்கள் என்று கூறி, ‘கடமை கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கழகம் காப்போம்’ என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றுள்ளார்.மேலும் திமுகவில் இணைந்த லோகநாதன் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுகவில் இணைக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe