வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா செண்டத்தூர் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக பத்துக்கும் மேற்பட்டவர்களுக்குதிடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மருத்துவக் குழுவினரை அனுப்பி எதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டது? குடிநீரில் கழிவு நீர் கலந்ததா அல்லது உணவுப் பொருட்களில் ஏதாவது பாதிப்பா ? சுற்றுப்புற அசுத்தங்களால் உருவானதா என பல்வேறு காரணங்கள் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.