Skip to main content

பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு; கிராமத்திற்கு விரைந்த மருத்துவக் குழு

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
More than 10 people were affected in a village in Vellore

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா  செண்டத்தூர் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி  நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு மருத்துவக் குழுவினரை அனுப்பி எதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டது? குடிநீரில் கழிவு நீர் கலந்ததா அல்லது உணவுப் பொருட்களில் ஏதாவது பாதிப்பா ? சுற்றுப்புற அசுத்தங்களால் உருவானதா என பல்வேறு காரணங்கள் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கல்குவாரி குட்டையில் குளியல்; இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
 Two boys who went to bathe in Kal queries drowned

வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில், செயல்படாத கல்குவாரி குட்டை உள்ளது. இந்தக் குவாரி குட்டைக்கு குளிக்க சென்ற வள்ளலார் பகுதியைச் சேர்ந்த பாலாஜி மகன் சரவணன்(15) மற்றும் மதன்குமார் மகன் அவினாஷ்(15) ஆகிய இருவரும் நீச்சல் தெரியாமலலேயே குட்டை நீரில் குளிக்க இறங்கிய நிலையில், தவறி விழுந்து நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர், வேலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்த நிலையில், தீயணைப்பு துறையினர் கல்குவாரி குட்டையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுவர்களின் சடலத்தை மீட்டனர்.

சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை தினம் என்பதால், நான்கு சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றதாகவும், அதில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Next Story

“இப்படி இருந்தா எப்படி ஓட்டுக்கேட்க முடியும்?” - கவுன்சிலரை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.எல்.ஏ

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
MLA advised the councillors to do the panchayat work properly

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்ட அடுத்த வெட்டுவானம் பகுதியில் எம்.எல்.ஏ நந்தகுமார் இன்று (18.7.2024) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைவருக்கும் குடிநீர் வழங்கும் அம்ரித் திட்டப் பணிகளில் தோண்டப்பட்ட குழிகளில் சரியான முறையில் ஒப்பந்ததாரர் சிமெண்ட் பேட்ச் ஒர்க் சரிவரச் செய்யாததால் பள்ளமாக இருந்தது.

உடனடியாக இதை அனைத்தையும் கொத்தி எடுத்து விட்டு மீண்டும் சிமெண்ட் சாலை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பணிகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது எனக் கவுன்சிலர்களைக் கடிந்து கொண்டார்.

தொடர்ந்து வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுமார் 43 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என அதிகாரிகள் இடத்தில் அறிவுரை வழங்கினார்.