cm seat.jpg

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர்.

Advertisment

அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் என்பது இல்லை. வெற்றிடம் இருந்தால் இயற்கையாக காற்று தானாக நிரப்பி விடும். ரஜினி, கமல், விஜயகாந்த், டிடிவி தினகரன், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்பட 10க்கும் மேற்பட்ட முதலமைச்சர் வேட்பாளர்கள் உள்ளனர். காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் இலக்கு, நோக்கம் ஆகும். ஆனால் இந்த தேர்தலில் இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் காமராஜர் ஆட்சி அமையும். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும்.

Advertisment

Thirunavukarasar

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. 3 அணியாக உடைந்தது, அதில் எடப்பாடி பழனிச்சாமி அணியையும், பன்னீர் செல்வம் அணியையும் பிரதமர் மோடி பஞ்சாயத்து செய்து இணைத்து வைத்துள்ளார். ஆனால் அவர்கள் இணைந்தாலும் இருவர்களுக்கிடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதுபோல மக்களிடம் கருத்து கேட்டோ, அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்து கேட்டோ எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பு வந்ததும் அதிமுக ஆட்சி தானாக கலைந்து விடும்.

தமிழகத்தில் முதலமைச்சர் ஆகும் கனவுடன் பலர் கட்சி துவங்குகின்றனர். ரஜினி, கமல், வரிசையில் தற்போது டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார். அவருக்கு எனது வாழ்த்து. கமல்ஹாசன் பா.ஜ.வுடன் இணையும் வாய்ப்பு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்று அவருக்காக மக்கள் ஓட்டு போடவில்லை. ஜெயலலிதாவிற்காகதான் ஓட்டு போட்டனர். இவ்வாறு கூறினார்.

Advertisment